2026 கல்வியாண்டிற்கான விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வானது ஏப்ரல் தொடங்கி மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Continues below advertisement

விஐடி நுழைவுத்தேர்வு:

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2026-ஆம் கல்வியாண்டிற்கான பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நேற்று(ஏப்ரல் 29) முதல் நாடு முழுவதும் உற்சாகமாகத் தொடங்கியது. இந்தத் தேர்வானது ஏப்ரல் மாதம் தொடங்கி மே 3-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 129 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 212 தேர்வு மையங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர்.

உலகளாவிய தேர்வு மையங்கள்

இந்த நுழைவுத் தேர்வானது இந்திய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 129 நகரங்களில் உள்ள 212 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதுதவிர வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களின் வசதிக்காக துபாய், அபுதாபி, கத்தார், மஸ்கட், பஹ்ரைன், குவைத், சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட 9 நாடுகளிலும் தேர்வுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

வேந்தர் ஆய்வு:

தேர்வு முடிவுகள் குறித்துப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மே மாதம் இரண்டாவது வாரத்தில் www.vit.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து தகுதி பெறும் மாணவர்களுக்கான கலந்தாய்வு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஐந்து கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு ஆய்வின் போது செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.