விருதுநகரில் குறள் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. ஓவியம் மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறள்வார விழாப்போட்டிகளில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ.சுகபுத்ரா கேட்டுக்கொண்டுள்ளார்

திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம், குறள்சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெற உள்ளது. என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
திருக்குறள் விழிப்புணர்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோராண்டும் குறள்வாரம் கொண்டாடப்பெறும் என அறிவிக்கப்பெற்றது. இதனை செயல்படுத்தும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் பொதுமக்கள் மட்டும் (அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள்பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் நீங்கலாக) கலந்துகொள்ளும் குறள்சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக 13.01.2026 – அன்று செவ்வாய்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்காம் தளத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
போட்டிகள்
விருதுநகர் மாவட்டப் பொதுமக்களுக்கு குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்களது பதிவை போட்டி நாளன்று போட்டி நடைபெறும் இடமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்பகல் 9.00 மணி முதல் 10.30 மணி வரையிலும் மற்றும் குறள் சார்ந்த ஓவியப் போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 வரை ஆதார் அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) நகலுடன் வருகை தந்து பதிவு செய்துகொள்ளலாம். ஓவியப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் A4 அளவு தாளில் மட்டுமே ஓவியம் வரைய அனுமதிக்கப்படுவர். மேலும், ஓவியம் வரைவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் உடன் கொண்டு வர வேண்டும். ஓவியப் போட்டிக்கான நேரம் 1 மணி நேரம் ஆகும். குறள் சார்ந்த ஓவியங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் (ஏதேனும் ஒரு குறளினை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்). சிறந்த ஓவியங்களாக தெரிவு செய்யப்படும் ஓவியங்களை கன்னியாகுமரியில் நடைபெறும் திருக்குறள் மாணவர் மநாட்டிற்கு அனுப்பி காட்சிப்படுத்தப்படும். அதிக எண்ணிக்கையிலான குறள்களை ஒப்பித்தோர் தரவரிசை அடிப்படையில் முதல் 5 பேருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.5000/- வீதமும், அடுத்த 5 பேருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.3000/- வீதமும், அடுத்த 5 பேருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.2000/- வீதம் மொத்தப் பரிசுத்தொகையாக ரூ.50000/- வழங்கப்படும். மேலும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- மும், இரண்டாம் பரிசு ரூ.3000/-மும், மூன்றாம் பரிசு ரூ.2000/- வீதம் மொத்தப் பரிசுத்தொகையாக ரூ.10000/-வழபேராசிரியர்கள் விவரங்களை அறிந்துகொள்வதற்கு உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர் என்ற முகவரியிலும் 04562-225596, 8248686391 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறள்வார விழாப்போட்டிகளில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ.சுகபுத்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.





















