கர்மவீரர் காமராஜர் தொடங்கிய பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை விழா சிறப்பாக நடைபெற்றது.

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள, கர்மவீரர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்குப் பள்ளித் தலைமை ஆசிரியரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளருமான இரா. தாஸ் தலைமை தாங்கினார். விழாவில் புதிதாகப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Continues below advertisement

 

இதனைத்தொடர்ந்து, மாணவர்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் வகையில், புத்தரிசியில் அகரம் எழுதி கல்விப் பயணத்தைத் தொட தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சித்ரா, திலகவதி, கீதா, லட்சுமி, தாரணி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற இம்மாணவர் சேர்க்கை விழா, மாணவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

சேலத்தில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்த பெற்றோர்கள்.

விஜயதசமியை முன்னிட்டு சேலம் குரங்குசாவடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில் ஆசிரமத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

குழந்தைகளுக்கு முதலில் வரிசையாக பெற்றோர்களின் மடியில் அமர வைத்து ஆசிரமத்தில் உள்ள ஐயர்கள் மூலம் தட்டில் பச்சரிசி வழங்கப்பட்டது இதனை அடுத்து கல்விப் பயிலும் மந்திரங்கள் வாசித்தனர் இதனை தொடர்ந்து குழந்தைகளின் நாவில் தங்க மோதிரத்தை தேனில் தடவி கல்வி அறிவு வளர ஓமங்கள் வாசித்தனர் தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தைகளின் விரல்களைப் பிடித்து அரிசியில் தமிழ் முதல் எழுத்து அ என்று எழுத வைத்து கல்விப் பயணத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் காலையிலேயே வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.