இந்தியாவின் மிகவும் முக்கியமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வேல்ஸ் கல்வி நிறுவனம் உள்ளது.  வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸில் (VISTAS) சார்பில் ”சக்சஸ் டே” கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார்.  1.5 கோடி மதிப்பிலான இந்த உதவித்தொகையை வெவ்வேறு துறைகளைச்சேர்ந்த 2137 மாணவர்கள் இதனை பெற்றுக்கொண்டனர். 


வேல்ஸ் குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் தனது உரையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் "வெற்றி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்" வார்த்தைகளை நினைவுக்கூர்ந்தார். வெற்றியை தக்கவைத்துக்கொள்ள அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி தேவை என்று வலியுறுத்தினார். மேலும் மாணவர்கள் தங்கள் கடின உழைப்பைத் தொடரவும், வரவிருக்கும் ஆண்டுகளிலும் இதே போல கல்வி உதவித்தொகையை நீங்கள் பெற பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.


வேல்ஸ் பல்கலைக்கழகம் 

100 ஏக்கர் பரப்பளவில் 3 வளாகங்களுடன் சென்னையில் அமைந்துள்ள பிரபலமான நிகர்நிலை பல்கலைக்கழகம் வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் அட்வாண்ஸ்டு ஸ்டடீஸ். பல்கலைக்கழக மானியக்குழுவால்  NAAC A++ அங்கீகாரம் வழங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவம், நர்சிங், பொறியியல், தொழில்நுட்பம், விவசாயம், கல்வி, மேலாண்மை ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள், சட்டம், கலை மற்றும் அறிவியல் என  UG முதல் Ph. D. வரை படிக்கலாம். 


சிறந்த மதிப்பெண் பெற்ற  2,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 1.5 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர். டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் துணைத் தலைவர் பிரீத்தா கணேஷ் ஆகியோர் வழங்கினர்.