யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

நாடு முழுவதும் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 1087 காலிப்பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் அனுஜ் அக்னிகோத்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்தார். ஆகான்ஷ் துல் என்பவர் மூன்றாம் இடம் பிடித்தார்.

 

 யுபிஎஸ்சி தேர்வில் இரண்டாம் இடம்பிடித்து சாதனை படைத்த ராஜேஸ்வரி என்ற மாணவி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதுரை மாவட்டம் வாடிபட்டியை சேர்ந்தவர் ஆவார். மேலும், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டை சேர்ந்த சுருதி என்பவர் 18ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.

யுபிஎஸ்சி தேர்வில் முதல் 20 இடங்களை பிடித்தவர்கள் 

ரேங்க்                       பெயர்
1அனுஜ் அக்னிகோத்ரி 
2ராஜேஸ்வரி 
3ஆகான்ஷ் துல் 
4ராகவ் ஜுன்ஜுன்வாலா
5இஷான் பட்நாகர்
6ஜின்னியா அரோரா
7ஏ.ஆர். ராஜா மொஹைதீன்
8பக்ஷால் சீக்ரெட்ரி
9அஸ்தா ஜெயின்
10உஜ்வால் பிரியங்க்
11யஷஸ்வி ராஜ் வர்தன்
12அக்ஷித் பரத்வாஜ்
13ஆன்யா சர்மா
14சுரபி யாதவ்
15சிம்ரன்தீப் கவுர்
16மோனிகா ஸ்ரீவசத்வா
17சித்வான் ஜெயின்
18ஸ்ருதி ஆர்
19நிஷார் திஷாந்த் அம்ருத்லால்
20ரவி ராஸ்