யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், இந்தத் தேர்வில் அதேபோல நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23ஆம் இடத்தைப்பிடித்துள்ளார். மோனிகா என்னும் தேர்வர் 39ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இவரும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.

Continues below advertisement


யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடந்தது. தொடர்ந்து நேர்காணல் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது.


இந்நிலையில் இன்று (ஏப்ரல் 22) இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 335 பேர் பொதுப் பிரிவினர். 109 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் ஆவர். ஓபிசி பிரிவில் 318 பேரும் எஸ்சி பிரிவில் 160 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் எஸ்டி பிரிவில் 87 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்வாகி உள்ளனர்.  


50 பேர் தேர்ச்சி


இந்த நிலையில், தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 134 பேர் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குச் சென்றனர். அதில் 50 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த 50 பேரில், 14 பேர் நான் முதல்வன் முழுநேர உறைவிடப் பயிற்சி பெற்றுள்ளனர்.


அதேபோல காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய இரு தேர்வர்கள், தமிழ் வழியில் யுபிஎஸ்சி தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.