2025ஆம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வின் முதன்மைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வை எழுதிய தேர்வர்கள், https://upsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம்.
நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படும் மதிப்புமிக்க போட்டித் தேர்வு யுபிஎஸ்சி தேர்வு ஆகும். இந்தத் தேர்வு மூன்று படிநிலைகளில் நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய தரவரிசை இதற்குப் பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை 2736 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். யார் யார் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரத்தை அறிய கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில், Written Result – Civil Services (Main) Examination, 2025 என்ற இணைப்பைத் தேர்வு செய்யவும்.
- அதை க்ளிக் செய்தால், தேர்வு முடிவுகள் அடங்கிய அறிவிக்கை திரையில் தோன்றும்.
- அல்லது, https://upsc.gov.in/sites/default/files/WR-CSME-2025-Engl-NameList-111125.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து நேரடியாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
தொலைபேசி எண்கள்:
011-23385271, 011-23381125
ஃபேக்ஸ் எண்கள்: 011-23387310, 011-23384472
இ மெயில் முகவரி: csm-upsc@nic.in