யுஜிசி புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கின்றன. யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிமுறைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

’’அடிப்படைக் கல்வி முதல் உயர் கல்வி வரை மத்திய அரசு இடர்ப்பாடுகளைச் செய்கிறது. கல்வியாளர் அல்லாத அல்லது கல்வித்துறை சாராதவர்களை எப்படி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்க முடியும்?

Continues below advertisement

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அனுமதி உண்டு

மக்களின் பண்பாட்டுக் கூறான கல்வியில், மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அனுமதி உண்டு. அதனால், யுஜிசி தன்னுடைய புதிய விதிகளை அமல்படுத்தாமல், திரும்பப் பெற வேண்டும்.

யுஜிசி புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கின்றன. யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிமுறைகளைத் திரும்பப் பெறவேண்டும்’’.

இவ்வாறு அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் வெளியீடு

அதேபோல மாநில கல்வி உரிமையைப் பறிக்கும் யுஜிசி வரைவறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று மாணவர்கள், பொதுமக்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதற்காக மின்னஞ்சல் வெளியிடப்பட்டு உள்ளது. மெயில் முகவரி - draft-regulations@ugc.gov.in

இதையும் வாசிக்கலாம்: UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?