யுஜிசி நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, 5,141 தேர்வர்கள் ஜே ஆர்எஃப் உதவித்தொகைக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 59,821 பேர் உதவிப் பேராசிரியர் தேர்வுக்கும் 117,058 தேர்வர்கள் பிஎச்.டி. படிப்புக்கும் தேர்வாகி உள்ளனர்.

யுஜிசி உதவிப் பேராசிரியர் பதவிக்கான தகுதி மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) வழங்குதல் அல்லது பி.எச்.டி. திட்டங்களில் சேர்வதற்கான தகுதிக்காக, நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

முன்னதாக  யுஜிசி நெட் தேர்வின் டிசம்பர் அமர்வுக்கான தேர்வு, டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 7 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நவம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

9.93 லட்சம் பேர் எழுதிய தேர்வு

இதில், 11 ஷிஃப்டுகளில் 6 நாட்களுக்கு 85 பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 283 நகரங்களில் 663 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இதனை 9,93,702 தேர்வர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான பிடிஎஃப் கோப்பு, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கட் ஆஃப் மதிப்பெண்

ஜேஆர்எஃப் உதவித்தொகைக்கான கட் ஆஃப் மதிப்பெண், 248 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல பிற பிரிவினருக்கும் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை காண்பது எப்படி?