யுஜிசி தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஜூன் மாத அமர்வு தேர்வுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முதல் 3 நாட்கள் நடைபெறும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை என்டிஏ வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்த நெட் தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை 83 பாடங்களுக்கும் ஒரே நாளில் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.


தேர்வு எப்போது?


யுஜிசி நெட் ஜூன் மாத அமர்வுக்கான தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 83 பாடங்களுக்கு, கணினி வழியில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. முன்னதாக ஜூன் 18ஆம் தேதி நெட் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் தாள் கசிவு எதுவும் நடக்கவில்லை என்று விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்துக்குத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.


இதன்படி, ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நெட் தேர்வு நடைபெற உள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ள யுஜிசி தேசிய தகுதித் தேர்வு மையங்களின் விவரங்களை என்டிஏ வெளியிட்டது. இந்த நிலையில், நெட் தேர்வு ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. எனினும் முதல் 3 நாட்கள் நடைபெறும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை என்டிஏ வெளியிட்டுள்ளது.


எந்த நாட்களில் என்ன தேர்வுகள்?


ஆகஸ்ட் 21 , ஷிஃப்ட் 1-  ஆங்கிலம், ஜப்பானிய மொழி, நிகழ்த்து கலைகள், மின்னணு அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள்


ஷிஃப்ட் 2 – ஆங்கிலம், டோக்ரி, ஸ்பானிஷ், ரஷ்யன், பெர்ஷியன் உள்ளிட்ட தேர்வுகள்


ஆகஸ்ட் 22 , ஷிஃப்ட் 1-  சமூக சேவை, வீட்டு அறிவியல், இசை, பிரெஞ்சு பதிப்பு, வயது வந்தோர் கல்வி/ முறைசாரா கல்வி, இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட தேர்வுகள்


ஷிஃப்ட் 2- பொது நிர்வாகம், கல்வி


ஆகஸ்ட் 23 , ஷிஃப்ட் 1 – கணினி அறிவியல், பயன்பாடுகள்


ஷிஃப்ட் 2- பெங்காலி, சைனீஸ், ராஜஸ்தானி, சோஷியாலஜி உள்ளிட்ட தேர்வுகள்


பெறுவது எப்படி?



  • தேர்வர்கள் nta.ac.in அல்லது nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.



  • அல்லது https://ugcnet.ntaonline.in/frontend/web/admitcard/admit-card-cbt என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

  • அதில், விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

  • உடனே ஹால் டிக்கெட் உங்கள் திரையில் தோன்றும்.


ஹால் டிக்கெட் குறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://ugcnet.nta.ac.in/images/public-notice-for-admit-card-of-ugc-net-june-2024.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.


மேலும் தகவல்களுக்குhttps://ugcnet.nta.ac.in/