யுஜிசி நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் டிசம்பர் மாத அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தேர்வர்கள் டிசம்பர் 10ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.


கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராகப் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


தேசியத் தேர்வுகள் முகமை மூலம் இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடக்கும். குறிப்பாக ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படும். இந்த நிலையில் டிசம்பர் மாத அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.


முக்கிய தேதிகள் இவைதான்!


ஜனவரி 1 முதல் 19ஆம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், தேர்வர்கள் டிசம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை டிசம்பர் 11 இரவு 11.50 மணி வரை செலுத்தலாம்.


விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் புதிதாக ஆயுர்வேத உயிரியல் பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 2024 முதல் தேர்வர்கள் இந்தப் பாடத்தையும் தேர்வு செய்து எழுதலாம். ஆயுர்வேதத்தின் பழங்கால அறிவியலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


UGC NET December 2024 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் ugcnet.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம் ஆகும். 


* முகப்புப் பக்கத்தில் UGC NET December 2024 Registration open - Click Here என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


* புதிதாக ஒரு பக்கம் தோன்றும். அதில் பதிவு செய்து, கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்தி செய்யவும். 


* தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.


* அதேபோல தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம். 


விவரங்களை முழுமையாகக் காண https://ugcnet.nta.ac.in/images/public-notice-ugc-net-december-2023-for-application.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


தேர்வர்கள் இ- மெயில் முகவரி: ugcnet@nta.ac.in


கூடுதல் தகவல்களுக்கு https://ugcnet.nta.ac.in/