திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக இணையவழியில் விண்ணப்பத்திற்கு வரும் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். அதனால மாணவர்களே நீங்க உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் இணையவழி விண்ணப்பப் பதிவு வரும் 27ம் தேதி வரை நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கு முன்பாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான, இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு வரும் 27ம் தேதி வரை நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் க. அங்கம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரியின் இ-சேவை மையத்தில் உள்ள சேர்க்கை உதவி (AFC) மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க கல்லூரியில் உதவி மையம் (Help Desk) செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலம் தாழ்த்தி விண்ணப்பம் செய்து ஏமாற்றம் அடைய வேண்டாம். எனவே இந்த கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பித்து தங்களின் விருப்பமான பாடங்களை தேர்ந்து எடுத்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.