மாநிலம் முழுவதும் முதுகலை ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை 1, மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, 1996 பணியிடங்களுக்கு இன்று (ஜூலை 10) முதல் விண்ணப்பிக்கலாம்.

பாடவாரியான காலிப்‌ பணியிட விவரங்கள்‌:

தேர்வு விண்ணப்பிப்பதற்கான கல்வித்‌ தகுதி, வயது மற்றும்‌ விண்ணப்பம்‌ செய்வதற்கான அனைத்து விவரங்களும்‌ அறிவிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும்‌, விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல்‌ 12.08.2025 பிற்பகல்‌ 5.00 மணி வரை கால அவகாசம்‌ வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்கும்போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்களை trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல்‌ வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும்‌. இதர வழியில்‌ அனுப்பும்‌ கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஊதியம் எவ்வளவு?

முதுகலை ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை 1, மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு 36,900 ரூபாய் முதல் 1,16,600 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு எப்போது?

காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி அன்று தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு இன்று (ஜூலை 10) முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆகஸ்ட் 13 முதல் 18ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  

தேர்வு குறித்த முழு விவரங்களை https://www.trb.tn.gov.in/admin/pdf/1660068677PG%20Notification%20final%2009.07.2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, அறிவிக்கையைக் கண்டு அறிந்துகொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.