மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1996 ஆசிரியர் பணி இடங்களில் சேர நடத்தப்படுவதாக அறிவித்த தேர்வு தேதி ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஆர்பி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’’முதுகலை ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை 1, ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ (https://www.trb.tn.gov.in) வாயிலாக 10.07.2025 அன்று வெளியிடப்பட்டது. அதில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு நாள்‌ 28.09.2025 என அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில்‌, அதே நாளில்‌ (28.09.2025) தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம் நடத்தும் Combined Civil Services Examination - II (Group 2, 2ஏ) தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்‌, மேற்படி முதுகலை ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை 1, மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு போட்டித்‌ தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் எவ்வளவு?

முதுகலை ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை 1, மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு 36,900 ரூபாய் முதல் 1,16,600 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது.

தேர்வு தேதியில் மாற்றம்

காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி அன்று தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தேர்வர்கள் நேற்று (ஜூலை 10) முதல் விண்ணப்பிக்கத் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆகஸ்ட் 13 முதல் 18ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பிப்பது எப்படி?

முழு விவரங்களுக்கு

தேர்வு குறித்த தகவல்களை https://www.trb.tn.gov.in/admin/pdf/1660068677PG%20Notification%20final%2009.07.2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, அறிவிக்கையையை அறிந்துகொள்ளலாம்.