உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வளர வளர, சைபர் குற்றங்களும் தாக்குதல்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. முக்கியமான தகவல்களையும் நெட்வொர்க்குகளையும் தனிப்பட்ட விவரங்களையும் அலுவல் சார்ந்த செயல்திட்டங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. இதற்கும் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் எத்திக்கல் ஹேக்கிங் தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஐஐடி உள்ளிட்ட முக்கியக் கல்வி நிறுவனங்கள், எத்திக்கல் ஹேக்கிங் படிப்புகளை இலவசமாக வழங்குகின்றன. அவை குறித்து விரிவாகக் காணலாம்.

Continues below advertisement

ஸ்வயம் எத்திக்கல் ஹேக்கிங் படிப்பு – ஐஐடி காரக்பூர்

ஐஐடி காரக்பூர் சார்பில் வழங்கப்படக் கூடிய எத்திக்கல் ஹேக்கிங் படிப்பு, ஸ்வயம் தளத்தில் இலவசமாக கற்பிக்கப்படுகிறது. இந்த படிப்பு, எளிமையான உதாரணங்கள் மூலம், தங்கள் நிறுவனங்களை சைபர் கிரைம் தாக்குதல்களில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்ற புரிதலை ஏற்படுத்துகிறது. படிப்புக்கான சான்றிதழைப் பெற , தேர்வர்கள் ஒரு தேர்வை எழுத வேண்டியது முக்கியம்.

சிஸ்கோவின் எத்திக்கல் ஹேக்கர் படிப்பு

70 மணி நேரம் வழங்கப்படும் இந்தப் படிப்பில் 60 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்து படித்திருக்கின்றனர். சிஸ்கோ நெட்வொர்க்கிங் அகாடமி இந்தப் படிப்பை இலவசமாக அளிக்கிறது.  இது மாணவர்களுக்கு எத்திக்கல் ஹேக்கிங் மற்றும் ஊடுருவல் திறன்களைக் கற்பிப்பதில் கவனம் செலுத்துகிறது.

Continues below advertisement

IBM எத்திக்கல் ஹேக்கிங்

IBM-ன் இந்தப் பாடநெறி, தகவல்களைச் சேகரிப்பதற்கும், பாதிப்பு பகுப்பாய்வு செய்வதற்கும் மற்றும் பலவற்றிற்கும் பயன்படுத்தப்படும் Kali Linux போன்ற நெறிமுறை ஹேக்கிங் கருவிகளுடன் மாணவர்களுக்கு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மெட்டாஸ்ப்ளோயிட் கட்டமைப்பின் மூலம் உருவகப்படுத்தப்பட்ட தாக்குதல்களைச் செய்வதற்கும் இது உங்களுக்குக் கற்பிக்கிறது. 4,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் சேர்ந்து படித்துள்ளனர். இந்த படிப்பு இலவசமாக 2 மாதம் கற்பிக்கப்படுகிறது.

ஜூன் 2025-ல், சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் 16 பில்லியனுக்கும் அதிகமான உள்நுழைவு சான்றுகளின் கசிவைக் கண்டுபிடித்தனர். அம்பலப்படுத்தப்பட்ட தரவுகளில் ஆப்பிள், கூகிள், பேஸ்புக், கிட்ஹப் மற்றும் டெலிகிராம் போன்ற முக்கிய தளங்களின் கணக்குகள் அடங்கும். இந்த நிறுவனங்கள் நேரடியாக ஹேக் செய்யப்படவில்லை என்றாலும், இவற்றின் தகவல்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.