TNPSC Press Meet LIVE: ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Press Meet Today LIVE: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிப்புகள் உடனுக்குடன்!
ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. அனைத்து இடங்களும் தேர்வு நடத்தப்படும். 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும்.
ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும். டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
குரூப் 4 தேர்வுக்கு 5255 காலி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த எண்ணிக்கை கடைசி நேரத்தில் மாறலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு தேதிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு சரியாக 4.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தமிழில் தாளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் குறைந்த பட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
தேர்வர்கள் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போதே, உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் பிடிஎஃப் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Background
TNPSC Press Meet Today LIVE
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணாயம் சார்பில் குரூப் 4 (Group 4) தேர்விற்கான அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது.
மார்ச் மாத இறுதியில் குரூப் 4 தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் டிஎன்பிஎஸ்சி தலைவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பாலச்சந்திரன் தெரிவித்தார். குரூப் 4(TNPSC Group 4 Exam ) தேர்வுகளுக்கு என்ன மாதிரியான பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்பது என்பது குறித்தான விவரங்களை தேர்வாணையம் முடிவு செய்தது.
குரூப் 4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள் கசிவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
குரூப் 4 தேர்விற்கு 5255 காலி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த அறிக்கையின்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழித் தாளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தமிழ் தேர்வில் குறைந்த பட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்த் தாளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வரின் மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும், தமிழ் தாளில் தோல்வியடைந்தால், மற்ற தாள்கள் திருத்துவதற்கு கணக்கில் எடுத்துக்ககொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலை தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதைக்கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -