தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் 50 தற்காலிக டைப்பிஸ்ட் பணியிடங்களில் சேர விண்ணப்பப் பதிவு இன்று (நவ.25) தொடங்கி உள்ளது. இதற்கு தேர்வர்கள் டிசம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


முக்கியத் தேதிகள்


தேர்வர்கள் டிசம்பர் 29 முதல் 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இந்த சிறப்பு போட்டித் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.


வயது வரம்பு


18 வயது முடிந்து இருக்க வேண்டும். 01.07.2024 அன்று 32 வயது முடிந்திருக்கக் கூடாது. எனினும் தேர்வர்களைப் பொறுத்து, உச்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.


கல்வித் தகுதி என்ன?


* குறைந்தபட்ச பொது கல்வித் தகுதி கட்டாயம்.


* அரசு தொழில்நுட்பத்‌ தேர்வில்‌ தட்டச்சில்‌ கட்டாயம்‌ தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.


* தமிழ் மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ முதுநிலை / உயர்நிலை (அல்லது)


  தமிழில்‌ முதுநிலை / உயர்நிலை மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ இளநிலை / கீழ்நிலை (அல்லது)


  ஆங்கிலத்தில்‌ முதுநிலை / உயர்நிலை மற்றும்‌ தமிழில்‌ இளநிலை / கீழ்நிலை


* தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால்‌ நடத்தப்படும்‌ கணினியில்‌ அலுவலக தானியங்கமாக்கல்‌ சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.


விண்ணப்பிப்பது எப்படி?


தேர்வர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


அதில், தேவையான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். 




தேர்வு நடைமுறை


சிறப்புப்‌ போட்டித்தேர்வு ஒருகட்டத்‌ தேர்வாக நடத்தப்படும்‌. தேர்வர்கள்‌ இணையவழி விண்ணப்பத்தில்‌
குறிப்பிட்டுள்ள விபரங்களின்‌ அடிப்படையிலேயே எழுத்துத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்‌.


மூலச்சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு அனுமதிப்பதற்கு முன்னர்‌ கணினிவழித்திரைச்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு
நடத்தப்படும்‌.


தேர்வர்கள்‌ எழுத்துத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ இறுதி தரவரிசையினை தீர்மானிக்கும்‌. தேர்வர்‌
எழுத்துத்‌ தேர்வில்‌ பெற்ற மொத்த மதிப்பெண்களின்‌ அடிப்படையிலேயே இறுதித்‌ தெரிவு
மேற்கொள்ளப்படும்‌.


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள 50 தற்காலிக டைப்பிஸ்ட் பணியிடங்களில் சேர்வதற்கான தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட முழு விவரங்களையும் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/SCE%20English%20Final_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம். 


முழு விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/