தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குரூப் 1, குரூப் 2 என பல கட்ட தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 213 இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 2 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது. 



பணியிடங்கள் அதிகரிப்பு:


தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக நடத்தும் தேர்வுகளில் பணியிடங்கள் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் அதற்காக போட்டியிடும் மாணவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, அந்த பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது.







மாணவர்கள் மகிழ்ச்சி:


குரூப் 2 தேர்வின் கீழ் வனவர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழ்நாடு வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வின் கீழ் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நிதித்துறை, மீன்வளத்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தொழில்துறை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள உதவியாளர் பணிக்கும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.


திருத்தப்பட்ட பணிகளின் அடிப்படையில் வனத்துறையில் வனவர் பதவிக்கு 121 ஆகவும், குற்ற விசாரணை துறையில் 22 ஆகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் 3 ஆகவும், தொழிலாளர்துறையில் 16 ஆகவும், சட்டத்துறையில் 6 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  


213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் 2 ஆயிரத்து 540 ஆக உயர்த்தப்பட்டிருப்பதால் தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.