டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ள நிலையில், 38 மாவட்டங்களிலும் அரசு வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை சார்பில், இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.        

Continues below advertisement

வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறையானது தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையங்களை நடத்தி வருகிறது. இங்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு செயல்படும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டங்கள்‌ வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்எஸ்யுஆர்பி மற்றும்‌ டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் தன்னார்வ பயிலும்‌ வட்டங்கள்‌ மூலம்‌ நடத்தப்படும்‌இப்பயிற்சி வகுப்புகளில்‌ ஆண்டுதோறும்‌ 20000-ற்கும்‌ மேற்பட்ட மாணவ/ மாணவிகள்‌ கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்‌.

Continues below advertisement

மேலும்‌, இப்பயிற்சி வகுப்புகளின்‌ மூலம்‌, அதிக அளவிலான மாணவ/ மாணவிகள்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப்‌ பெற்றுள்ளனர்‌.

இலவசப் பயிற்சி வகுப்புகள்‌

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படவுள்ள குரூப் 4 தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு நேற்று (30.01.2024) வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்‌ அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில்‌ சிறந்த மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ பயிற்றுநர்களைக்‌ கொண்டு நடத்தப்பட இள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகளில்‌ அதிக அளவிலான மாணவ/ மாணவியர்‌ கலந்து கொண்டு தேர்வுகளில்‌ வெற்றி பெற்று அரசு வேலையை பெறலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறையின்‌ ஆணையர்‌ சுந்தரவல்லி, தெரிவித்துள்ளார்.

அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் நடப்பு நிகழ்வுகள் குறித்த விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. https://tamilnaducareerservices.tn.gov.in/vle/course/240115456  என்ற இணைப்பில் இவற்றைக் காணலாம்.

அதேபோல https://tamilnaducareerservices.tn.gov.in/vle/syllabus என்ற இணைப்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இணைப்பைப் பெறலாம். இதில், https://tamilnaducareerservices.tn.gov.in/asset/docs/syllabus/Group_IV.pdf என்ற இணைப்பில், குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தைப் பெற முடியும். 

குரூப் 4 தேர்வு எப்போது?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

 கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnvelaivaaippu.gov.in/

போட்டித் தேர்வுகளுக்கான உபகரணங்களைப் பெற:

https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தொலைபேசி எண்கள்: 044-22501002, 044-22501006

இ- மெயில் முகவரி: tnvleportal@gmail.com