குரூப் 3 தேர்வர்களுக்கு வனக்‌ காவலர்‌ மற்றும்‌ சுருக்கெழுத்து தட்டச்சர்‌ பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு 4 (குரூப் 4) (அறிவிக்கை எண்‌. 01,2024) பணிகளில்‌ அடங்கிய வனக்‌ காவலர்‌ (பழங்குடியின இளைஞர்‌) மற்றும்‌ சுருக்கெழுத்து தட்டச்சர்‌ - Il பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஏழாம்‌ கட்ட மூலச்சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

Continues below advertisement

குறிப்பாக 07.07.2025 அன்று தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌. எண்‌.3, தேர்வாணையச்‌ சாலை (பிராட்வே பேருந்து நிலையம்‌ மற்றும்‌ கோட்டை ரயில்‌ நிலையம்‌ அருகில்‌), சென்னை - 600 003ல்‌ உள்ள தேர்வாணைய அலுவலகத்தில்‌ நடைபெற உள்ளது.

மேற்குறிப்பிட்ட மூலச்சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின்‌ பட்டியல்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் https://tnpsc.gov.in/Document/Counselling/01_2024_GR_IV_TRIBAL_YOUTH_STENO_TYP_PH_7.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து இந்த பட்டியலைப் பெறலாம்.

மூலச்சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பு நாள்‌, நேரம்‌ மற்றும்‌ இதர விவரங்கள்‌ அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான https://tnpsc.gov.in-ல்  இருந்து பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

அஞ்சல்‌ மூலம்‌ அனுப்பப்பட மாட்டாது

மூலச்சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும்‌ தேர்வர்களுக்கு அதற்கான விவரம்‌ குறுஞ்செய்தி (SMS) மற்றும்‌ மின்னஞ்சல்‌ (E-mail) மூலமாக மட்டுமே தெதரிவிக்கப்படும்‌. மூலச்சான்றிதழ்கள்‌ சரிபார்ப்பிற்கான அழைப்பாணை தனியே அஞ்சல்‌ மூலம்‌ அனுப்பப்பட மாட்டாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும்‌ அனைவருக்கும்‌ பணி நியமனம்‌ வழங்கப்படும்‌ என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள்‌ மேற்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு குறிப்பிடப்பட்ட நாள்‌ மற்றும்‌ நேரத்தில்‌ கலந்துகொள்ளத்‌ தவறினால்‌ அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது’’

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

பட்டியலைக் காண: https://tnpsc.gov.in/Document/Counselling/01_2024_GR_IV_TRIBAL_YOUTH_STENO_TYP_PH_7.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கடந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு, ஜூன் 9ஆம் தேதி 2024-ல் நடைபெற்றது. முன்னதாக 2025ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், ஜூலை 12ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.