TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான ஆன்சர் கீ எப்போது வெளியாகும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு எதுவும் டிஎன்பிஎஸ்சி தளம் சார்பாக வெளியிடப்படவில்லை. அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைய தள முகவரியான tnpsc.gov.in என்ற தளத்தை மட்டுமே பார்வையிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஆன்சர் கீயைப் பார்ப்பது எப்படி? (How To Download TNPSC Group 2 Answer Key?)
-
தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரியான gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
-
அதில் "Recruitment" என்னும் பகுதியில், "Questions Papers/Answer Keys" என்ற தெரிவை க்ளிக் செய்ய வேண்டும்.
அங்கு பட்டியலிடப்பட்டுள்ள தேர்வுகளில், Group 2 Answer என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
விடைத்தாள் ‘பொதுத் தமிழ்’ மற்றும் ‘பொது ஆங்கிலம்’ எனப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்வின் நான்கு வெவ்வேறு பகுதிகள் (Series) A, B, C, D-க்கு தனித்தனியாக வெளியிடப்படும்.
-
தேவையான ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும்.
-
தொடர்ந்து தற்காலிக விடைக் குறிப்பு தானாகவே பதிவிறக்கம் ஆகும்.
ஆட்சேபனை செய்யலாம்
தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியான பிறகு, அதில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால், தேர்வர்கள் அதனை ஆட்சேபனை செய்யலாம். எனினும் அதற்கு புத்தகம் அல்லது பிற மூலங்களில் இருந்து உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர், பதிப்பாளர் பெயர், பதிப்பான ஆண்டு, பக்க எண் ஆகிய விவரங்கள் முக்கியம். குறிப்பிட்ட நாட்களுக்குள், விடைக் குறிப்பை தேர்வர்கள் ஆட்சேபிக்க வேண்டியது முக்கியம்.
தமிழ்நாடு அரசு அளவில் குரூப் 2 தேர்வு, உயரிய அதிகாரிகள் நிலையிலான பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. குறிப்பாக துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி ஆணையர் உள்ளிட்ட பதவியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/