டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவுகள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது குரூப் 2 ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவுகள் ஆகியவை வெளியாகி உள்ளன.
காண்பது எப்படி?
* தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/finalresult/03_2022_GROUP_IIA_SERVICES_FINAL_SEL.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, குரூப் 2 ஏ தேர்வு முடிவுகளைக் காணலாம்.
கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் ஜூனியர் கூட்டுறவு ஆடிட்டர் (Junior Cooperative Auditor in the Department of Cooperative Audit) ஆகிய பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு
* அதேபோல, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
* அதை https://www.tnpsc.gov.in/english/Checkresult.aspx?key=d70eb8b0-d98b-45d1-9fd6-4b48343f6ce7&&id=49096913-2A71-4B31-87E9-7D0D3A2FC22D என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
* எனினும் பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளிட்டே பார்க்க முடியும்.
25 காலிப் பணியிடங்களுக்காக இந்தத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 14,604 பேரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/