டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் செலுத்தவும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் நாளை (ஜனவரி 2) கடைசித் தேதி என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 11.2025 நாள் 15.072025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (குரூப் 2 மற்றும் 2 A பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு 28.09.2025 மு.ப தேதியில் நடைபெற்றது.

தேர்வு தேதிகள் தெரியுமா?

இதற்கான முதன்மைத் தேர்வு 08.02.2026 மு.ப., குரூப் 2 A பணிகள் 08.02.2026 பிற்பகல் தமிழ் தகுதி தேர்வு மற்றும் 22.02.2026 முற்பகல் குரூப் 2 பணிகளுக்கான தேர்வும் நடைபெற உள்ளது.

Continues below advertisement

ஆனால் இதுவரை 700 விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக் கட்டணம் செலுத்தவில்லை. மற்றும் 113 மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்கள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவில்லை.

நாளை கடைசி

எனவே அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு OTR காலம் 02.01.2026, 11.59 மணி வரை (அதாவது 4 நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள், இதைப் பயன்படுத்தி முதன்மைத் தேர்வுக் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்.

தேர்வர்கள் https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைய முகவரியைப் பயன்படுத்தி, இந்த செயல்களை மேற்கொள்ளலாம். 

மேலும் தேர்வர்கள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழை தேர்வாணையத்தின் இணைய தளமான https://www.tnpsc.gov.in/ ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கால வரம்பு நீட்டிக்கப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் அறிவிப்பு விடுத்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/