டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி மேலும் தெரிவித்து உள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 28.09.2025 மு.ப. நடத்தப்பட்டது. இதில் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45-க்குள் ஆட்சேபிக்க்க வேண்டும்.

ஆட்சேபணை செய்வது எப்படி?

  • சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தேர்வாணைய இணையதளத்தில் உள்ள "Answer Key Challenge" என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்ய முடியும்.
  • இதற்கான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன.
  • குறிப்பாக பொதுத் தமிழ் தேர்வை எழுதிய தேர்வர்கள் https://tnpsc.gov.in/english/Answerkeychallenge.aspx?key=27aca5d0-9e6e-448e-a0ac-5151425f96b9 என்ற இணைப்பை க்ளிக் செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். 
  • அதேபோல, பொது ஆங்கிலம் தேர்வை எழுதிய தேர்வர்கள், https://tnpsc.gov.in/english/Answerkeychallenge.aspx?key=cc149ec8-330e-49e0-824e-a1aae0544474 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம். 
  • இவை இரண்டிலுமே தேர்வர்கள், தங்களின் பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாடம் மற்றும் கேள்வி எண் ஆகியவற்றை சரியாக நிரப்பி, சப்மிட் பொத்தானை அழுத்த வேண்டும். 
  • அதில் தேவையான விவரங்கள் தோன்றும்.

அதே நேரத்தில் அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/