இதில், உத்தேச விடை - முறையீடு செய்வதற்கான வழிமுறையை ஏன்னும் பக்கத்தைத் தரவிறக்கம் செய்து காணலாம்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்- 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 14-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 2,327 இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காலி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர்.
இதில் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் (Tentative Key) தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.
இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5.45-க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள Answer Key Challenge என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம்.
இதற்கான அறிவுரைகள், வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் https://tnpsc.gov.in/tamil/Instructions_to_Applicants.html என்ற இணைப்பை க்ளிக் செய்து, இதை அறிந்துகொள்ளலாம்.
இதில், விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், கணினி வழித் தேர்வு குறித்து விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், காணொளி வடிவில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் - ஒளிக்குறி உணரி (OMR) அடிப்படையிலான தேர்வு, மாதிரி OMR விடைத்தாள், மாதிரித் தேர்வு - கணினி வழித் தேர்வு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், உத்தேச விடை - முறையீடு செய்வதற்கான வழிமுறை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், உத்தேச விடை - முறையீடு செய்வதற்கான வழிமுறையை ஏன்னும் பக்கத்தைத் தரவிறக்கம் செய்து காணலாம்.
வேறு தகவல்களுக்கு: 1800 419 0958
இ- மெயில் முகவரி: grievance[dot]tnpsc[at]tn[dot]gov[dot]in