டிஎன்பிஸ்சி சார்பில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே இந்த ஹால் டிக்கெட்டை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி அசத்தி உள்ளது.

Continues below advertisement


எந்த பணி இடங்களுக்கு குரூப் 1 தேர்வு?


பொதுவாக தமிழக அரசுப் பணிகளில் உயரிய பதவிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), உதவி ஆணையர் (வணிக வரித் துறை), துணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்தடுத்து முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவை மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌ வெளியிட்ட செய்திக் குறிப்பு:


’’தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அறிவிக்கை எண்கள்‌: 04/2025 & 05/2025 நாள்‌ 01.04.2025-இன்‌ வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு-। (குரூப் -। பணிகள்‌) மற்றும்‌  ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு- 1& ( குரூப்-। & பணி)-இல்‌ அடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 முற்பகல்‌ நடைபெற உள்ளது.


தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) தேர்வாணையத்தின்‌ இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.




ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?




    • குரூப் 1 தேர்வை எழுதும் தேர்வர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவு தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.

    • எனினும் விண்ணப்ப எண்‌, பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டியது அவசியம்.

    • தேவையான தகவல்களைப் பதிவேற்றம் செய்து, தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.







தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாகவே இந்த ஹால் டிக்கெட்டை வெளியிட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்க!