தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஏப்.27முதல் இலவச பயிற்சி வகுப்புகள்- பங்கேற்பது எப்படி?

திருமா பயிலகத்தின் சார்பில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு, குறிப்பாக குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

திருமா பயிலகத்தின் சார்பில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு, குறிப்பாக குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் ஏப்ரல் 27 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் விசிக தலைவரும் எம்.பி.யுமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து மேலும் அவர் கூறி உள்ளதாவது:

சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தில் பயிற்சிப் பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
 
திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இப்பயிலகத்தில் 27.04.2025 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC-  Gr- 1, Gr- 2, Gr-2 A, Gr-4, (VAO) & SI தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பின்வரும் பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயிலகத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுகிறோம்.
 
தொடர்புக்கு:
 
சென்னை: 8610392275
 
அங்கனூர்: 9843660449
 
ஜெயங்கொண்டம்: 9952860844
 
சிதம்பரம் 96557 46475
 
திருப்போரூர் 7092521698
 
கும்பகோணம் 7904832410
 
திருவாரூர்: 8825995117
 
திருச்செந்தூர்: 8675590803
 
கள்ளக்குறிச்சி: 9843702449
 
நாகப்பட்டினம் 9787825382
 
நெடுங்குளம் 7639091631
 
புதுகோட்டை 9443903727
 
குறிஞ்சிப்பாடி 9042991182
 
மதுராந்தகம் 9566227765
 
திண்டிவனம் 9043751262
 
வடலூர் 9942389886
 
திருச்சி 8508082300
 
தஞ்சாவூர் 9600792241
 
மணப்பாறை 9942559977
 
மின்னஞ்சல் : thirumapayilagam@gmail.com
 
இவ்வாறு திருமா பயிலக காப்பாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரசு போட்டித் தேர்வுகளுக்கு பல்வேறு அரசு, தனியார்  அமைப்புகள் சார்பில், இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
Continues below advertisement