நேர்காணல் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான (Combined Technical Services Examination) பணியிடங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக 15 பணியிடங்களை உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை, 111 ஆக அதிகரித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் கணக்கு தொடங்கப்பட்டது. இதில் குரூப் 1, 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் அறிவிக்கைகள், தேர்வு தேதிகள், பிற தேர்வுகள் விவரம், தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு குறித்த பல்வேறு அப்டேட்டுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேர்காணல் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்களின் எண்ணிக்கையும் மாற்றி அமைப்பு
அக்கவுண்ட்ஸ் ஆஃபிஸர் பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, துணை மேலாளர்கள் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்ட்டல்) பணியிடங்களின் எண்ணிக்கையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
உதவி மேலாளர் (மெட்டீரியல்கள்), உதவி மேலாளர் (டெக்னிக்கல், மெக்கானிக்கல்) பணியிடங்கள் தலா 1 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.
2024ஆம் ஆண்டு வெளியான அறிவிக்கை
முன்னதாக இந்தத் தேர்வு குறித்த அறிவிப்பு, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது 96 பணி இடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி, இன்று 15 இடங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்த கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in/Document/English/ADDENDUM_12C.pdf என்ற இணைப்பில் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/