ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனால், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

Continues below advertisement


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி ஃபேக்ட் செக்கில் தெரிவித்து உள்ளதாவது:


Fact Check


'X' (formerly Twitter)' (trending) செய்தால், தேர்வாணையம் எண்ணிக்கையை காலிப் பணியிடங்களின் அதிகரிக்கும் என சிலர் சமூகவலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.


உண்மை என்ன?


இது தவறான தகவல்.


தேர்வாணையம் தேர்வர்களின் நலன் கருதி, ஒவ்வொரு அறிவிக்கையிலும், அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையில், கலந்தாய்விற்கு முன்பு, கூடுதல் காலிப் பணியிடங்களை சேர்த்து அறிவித்து வருகிறது. 'X' தளத்தில் ட்ரெண்டிங் செய்வதற்கும், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை உயர்விற்கும் எந்த தொடர்பும் இல்லை.


தவறான தகவலை பரப்பாதீர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 


 






முன்னதாக கடந்த மாதம் குரூப் 4 காலி இடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல குரூப் 2 காலி இடங்களின் எண்ணிக்கையும் இடையில் உயர்த்தப்பட்டது. இது துறை சார் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்கும் தேர்வர்கள் சமூக வலைதளங்களில் காலி பணியிடங்களை அதிகரிக்கச் செய்யும் கோரிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி தெளிவுபடுத்தி உள்ளது. 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/