TNPSC News LIVE: 2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு: குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் அறிவிப்பு!
TNPSC Group 2, 4 Exam Notification 2022 LIVE Updates: 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டி தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியீடு
டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அதன் தலைவர் பாலச்சந்திரன் கூறியதற்கு, கடந்த முறையும் இதோபோல் அறிவித்து நடத்தவில்லை என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு கொரோனா ஊரடங்கால் சொல்லியபடி தேர்வுகள் நடத்தமுடியவில்லை என்று கூறிய அவர், இந்த முறை தேர்வுகள் நடத்தப்படும் என்று பதிலளித்தார்.
டிஎன்பிஎஸ்சி அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம். குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் தமிழ் தகுதித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
டிஎன்பிஸ்சி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும், ஒன் டை ரிஜிஸ்டிரேசன் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், முறைகேடுகளை தடுக்க, ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரம், இனி தேர்வு முடிந்த பின் தனியாக பிரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும் என்றும், விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5831
குரூப் 4 தேர்வில் பழைய காலி பணியிடம் 5255, புதிய காலி பணியிடம் 3000
காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது என தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 பிப்ரவரியில் குரூப் - 2 தேர்வும், மார்ச்சில் குரூப் - 4 தேர்வும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அதன் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
டிஎன்பிஎஸ்யின் திட்ட அறிக்கையில் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், புதிய விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கலாம் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Background
TNPSC Group 2, 4 Exam Notification 2022 LIVE
டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் எத்தனை புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தை முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடும். அந்த வகையில், 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டி தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி இன்று காலை 11 மணியளவில் வெளியிடுகிறது.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -