2026- 2027ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026- 27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம்.
நேரடியாகவே
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2026- 2027ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை 1 மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 126959 (Shift 101022/ Shift - II 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48/-
பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்
SC/ ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை.
பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்
www.tngasa.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் பதிவுசெய்யத் தொடங்கும் நாள் - 07.05.2026
பதிவு செய்ய இறுதி நாள் - 29.05.2026
கட்டணத்தை செலுத்தும் முறை
Debit Card / Credit Card/ Net Banking/ UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 044- 24343100 / 24342011 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
