பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க அவகாசம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

விண்ணப்பப் பதிவு எப்போது?

தமிழ்நாடு முழுவதும் மே 8ஆம் தேதி அன்று 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதற்கு முன்னதாகவே பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

குறிப்பாக மே 3ஆம் தேதி அன்று பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு ஆரம்பித்து நடைபெற்று. மே 31ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்புகளில் சேர 2,81,502 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 2,17,627 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனர்.

Continues below advertisement

ஜூன் 5ஆம் தேதி வரை அவகாசம்

அதேபோல 1,84,053 பேர் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த படிப்புகளில் சேர ஜூன் 2ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவகாசம் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, ஜூன் 5ஆம் தேதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026 (TNEA 2026) நடைமுறை

  • பதிவு செய்தல்,
  • பணம் செலுத்துதல்,
  • தேர்வு நிரப்புதல்,
  • ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல்

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணை

சமவாய்ப்புஎண் ஒதுக்கப்படும் நாள் (அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்) - ஜூன் 5 சான்றிதழ்கள் சரிபார்க்கும் நாட்கள் (இணையதள வாயிலாக) - 20.06.2026 தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 29.06.2026 சேவை மையம் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்தல்- 30.06.2026 to 04.07.2026

கலந்தாய்வு எப்போது?

அரசு பள்ளிகளில் பயின்ற சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு பொதுக் கலந்தாய்வு, துணைக் கலந்தாய்வு, எஸ்.சி.ஏ காலியிடம் எஸ்.சி வகுப்பிற்கான கலந்தாய்வு, கலந்தாய்வு இறுதி நாள் ஆகியவை பின்னர் ஏஐசிடிஇ அறிவிப்பைத் தொடர்ந்து தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையதள வாயிலாகவே நடத்தப்பட உள்ளன. 

என்னென்ன ஆவணங்கள் தேவை?

https://static.tneaonline.org/docs/1_Details_and_Documents_required_2026.pdf?t=1780297815622 என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வர்கள் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்களை அறியலாம்.

தொலைபேசி எண்: 1800-425-0110

இ மெயில் முகவரி: tneacare@gmail.com