தமிழ்நாட்டில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் துணைக் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், கல்லூரியை தேர்வு செய்ய நாளையே கடைசித் தேதி ஆகும். மாணவர்கள் ஆக.22ஆம் தேதி மாலை 5 மணி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி இட ஒதுக்கீட்டு ஆணை

இவர்களுக்கான தற்காலிக கல்லூரி இட ஒதுக்கீடு ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் அதை அன்று இரவு 7 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

பொறியியல் துணைக் கலந்தாய்வில் கலந்துகொள்ள பொதுப் பிரிவில் 15,104 பேரும் தொழில் பிரிவில் 299 பேரும் தகுதியானவர்களாக உள்ளனர். இதுவே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 5,163 மற்றும் 96 பேர் தகுதி வாய்ந்தோராக உள்ளனர்.

மொத்த இடங்கள் எத்தனை

எனினும் பொதுப் பிரிவில் இன்னும் 42,512 இடங்களும் தொழிற் பிரிவில் 2,478 இடங்களுக்கும் இன்னும் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.