பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் துணைக் கலந்தாய்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இன்றே (செப்டம்பர் 3) கடைசித் தேதி ஆகும். 


ஒற்றைக் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் விண்ணப்பிக்க 1,60,780 பொறியியல் இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுப் பிரிவுக்கு 1,48,721 இடங்களும் 7.5 சதவீத ஒட ஒதுக்கீட்டுக்கு, 12,059 இடங்களும் ஒதுக்கப்பட்டன.  அங்கீகாரம் பெற்றும் 442 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்தி வருகின்றன. 


இதைத் தொடர்ந்து பொறியியல் படிப்பில் சேர 50,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்த நிலையில் துணைக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். செப்டம்பர் 6 முதல் 8ம் தேதி வரை இணைய வழியில் துணைக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 


பி.இ./ பி.டெக். பொறியியல்‌ பட்டப்படிப்புக்கான மாணாக்கர்‌ சேர்க்கைக்கான துணைக்‌ கலந்தாய்வு குறித்து குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் கூறும்போது, ’’தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை 2023-24 பொதுக்‌ கலந்தாய்வின்‌ முடிவில்‌ நிரப்பப்படாமல்‌ உள்ள இடங்களுக்கு, 12-ஆம்‌ வகுப்பு பொது (Academic) மற்றும்‌ தொழிற்‌பயிற்சி (Vocational) பயின்று சிறப்பு துணைத் தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தமிழ்நாட்டைச்‌ சார்ந்த மாணவர்கள் மற்றும்‌ 2023 பொதுக்‌ கலந்தாய்வில்‌ கலந்து கொள்ள இயலாத மாணவர்களும்‌ https:/www.tneaonline.org அல்லது https:/www.dte.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்‌.


இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை (TNEA Facilitation Centers - டிஎஃப்சி) மையங்களில் அனைத்து மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பக் கட்டணம்


OC/ BC/ BCM/ MBC & DNC - ரூ.500
எஸ்சி/ எஸ்சிஏ/ எஸ்டி - ரூ.250




கட்டணத்தைச் செலுத்துவது எப்படி?


பதிவுக் கட்டணத்தை பற்று அட்டை, கடன் அட்டை மற்றும்‌ இணையவழி வங்கிக் கணக்கு ( Credit Card /Debit Card/ Net Banking / UP) வழியாக செலுத்த வேண்டும்‌. கேட்பு வரைவோலையாக (Demand Draft) செலுத்த விரும்பும்‌ ண்ண ர்கள்‌  “The Secretary, TNEA,  payable at Chennai என்ற பெயரில்‌ 28.08.2023 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ எடுக்கப்பட்ட வரைவோலையை அருகாமையில்‌ இயங்கும்‌ தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை உதவி மையத்தில்‌ மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்‌. 


முன்னதாக ஆகஸ்ட் 28ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பப்‌ பதிவு செய்ய வேண்டிய இன்றே கடைசி நாள்‌ ஆகும். 


மாணவர்கள் https://suppl.tneaonline.org/user/register என்ற இணைப்பை பயன்படுத்தி, முன்பதிவு செய்த பிறகு விண்ணப்பிக்கலாம்.