தமிழ்நாடு முழுவதும் இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சேர்க்கைக்​கு விண்​ணப்பப் பதிவு மே 2ஆம் வாரத்​தில் தொடங்​கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் 400-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்​கி வருகின்றன. இவற்றில் இளநிலை பொறி​யியல் படிப்​புகளுக்கு சுமார் 1.7 லட்​சம் இடங்​கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆண்​டு​தோறும் இவை பொது கலந்​தாய்வு மூலம் ஒற்​றைச் ​சாளரம் எனப்படும் சிங்கிள் விண்டோ மூலம் நேரடியாக நிரப்​பப்​படு​கின்​றன.

பொறியியல் கலந்தாய்வு எப்போது?

இந்த பொறியியல் கலந்​தாய்வை டோட் எனப்படும் தொழில்நுட்​பக் கல்வி இயக்​குநரகம் நடத்துகிறது. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு மூலம் ஜூலை மாதம் இணைய வழி​யில் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான விண்ணப்பப் பதிவு மே 2-வது வாரத்​தில் தொடங்​க​ உள்​ள​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வட்டாரத்தில் கூறும்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. அவை வெளியானதும் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு மே 2ஆம் வாரம் முதல் தொடங்கும்.

ஜூன் மாதம் தரவரிசை பட்டியல்

விண்ணப்பம் பெறப்பட்டு ஜூன் மாதம் தரவரிசை பட்டியலை வெளியிட உள்ளோம். ஜூலையில் கலந்தாய்வை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கான கால அட்டவணை ஜூனில் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை குறைவா?

பொதுவாக சில ஆண்டுகளாக பொறியியல் சேர்க்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் ஏஐ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டதன் காரண​மாக, பொறி​யியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்​டு​களாக அதிகரித்து​ வரு​கிறது. அதேபோல இந்த ஆண்டும் சேர்க்கை அதிகரிக்கும்’’ என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் சேர்க்கை தொடர்பான கூடு​தல் விவரங்களை https://www.tneaonline.org/ எனும் வலைத்​தளத்​தில் மாணவர்​கள் அறிந்து கொள்​ளலாம்.