தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று பொறியியல் சேர்க்கை குழு தலைவர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். மாணவர்கள் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


அசல் சான்றிதழ்களை ஜூன் 12ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அன்றே ரேண்டம் எண் எனப்படும் சம வாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் (அரசு ஒதுக்கீடு) கீழ் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


2024 -ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. இது மே 6ம் தேதி முதல் ஜூன் 6 தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


என்னென்ன ஆவணங்கள் தேவை?


+2 மதிப்பெண் சான்றிதழ்


10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்


+2 வகுப்பு அட்மிட் கார்டு


சாதி சான்றிதழ்


இருப்பிட சான்றிதழ் ( e-Certificate - digitally signed, if applicable)


விண்ணப்ப பதிவுக்‌ கட்டணம்‌


ஓ.சி, பி.சி, பி.சி.எம்., எம்.பி.சி.- ரூ.500
எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி.- ரூ.250


 டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம்‌.   “The Secretary TNEA” payable at Chennai.. என்ற பெயரில்‌ இன்று முதல் வரைவோலையை (Demand Draft) பதிவுக்‌ கட்டணமாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TFCs) வாயிலாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.tneaonline.org/user/login அல்லது http://www.dte.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.


முக்கிய தேதிகள்:


அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - 12.06.2024


சமவாய்ப்பு எண் ஒதுக்கப்படும் நாள் - 12.06.2024


சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் நாட்கள் (இணையதள வாயிலாக) - 13.06.2024 முதல் 30.06.2024 வரை


தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 10.07.2024


சேவை மையம் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்தல் - 11.07.2024 முதல் 20.07.2024 வரை


கூடுதல் விவரங்களுக்கு...


தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110


இ- மெயில் முகவரி: tneacare@gmail.com