தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 25) வெளியாக உள்ளது. இதை கோவையில் உள்ள அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

12ஆம் வகுப்பு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகளைக் கொண்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தரவரிசைப் பட்டியலைக் காண்பது எப்படி?

  • https://tnau.ucanapply.com/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தர வரிசைப் பட்டியலைக் காணலாம்.
  • அல்லது tnau.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • அதில்  ‘Rank List’ என்ற தெரிவை க்ளிக் செய்யவும்.
  • தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, சப்மிட் பொத்தானை அழுத்தவும்.
  • தரவரிசைப் பட்டியலுக்கான ஆவணம் திரையில் தோன்றும்.
  • அதை வருங்காலத் தேவைக்காக சேமித்து வைத்துக்கொள்ளவும்.

வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிக்கையை  https://drive.google.com/file/d/1Rusf4Q7KIheQkXL6NzR4Yr8wzaPMCZrH/view என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.

அடுத்தது என்ன?

தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, இ மெயில் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அடுத்தபடியாக அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

கோவையில் 1906ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் பத்து வளாகங்களில் பத்து கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 12 இளம் அறிவியல் பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக வேளாண்மைப் படிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடத் திட்டங்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை

இந்தப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எதையும் நடத்த வேண்டியதில்லை. பிளஸ் 2 மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, வேளாண் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

கலந்தாய்வு எப்படி?

தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கு மற்றும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு, ஆன்லைன் கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்குப் பிறகு, நேரடியாக முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: ugadmissions@tnau.ac.in

மொபைல் எண்: 09488635077 / 09486425076

இணைய முகவரி: https://tnau.ac.in/