அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் தவறான விடைகள் என்று கருதுவதைத் தேர்வர்கள் ஆட்சேபிக்கலாம் என்றும் டிஆர்பி தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் நடந்த தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.04/2025, நாள் 16.10.2025. ன் படி 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு 27.12.2025 அன்று நடைபெற்றது.
மேலும், காலையில் நடைபெற்ற OMR தேர்வுக்கான (Part A and Part B of Paper-I) குறிப்புகள் மீதான ஆட்சேபணைகள் தெரிவிக்க Objection Tracker URL வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் https://trbiucanapply.com என்ற இணைப்பின் மூலம் இதைக் காணலாம்.
ஆட்சேபணை செய்ய ஜனவரி 13 கடைசி
உத்தேச விடைக் குறிப்புகளின் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் ஜனவரி 13ஆம் தேதி (13.01.2026) பிற்பகல் 5.30 மணி வரை உரிய ஆட்சேபணையினை பதிவு செய்திடல் வேண்டும்.
ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படும் விடைக் குறிப்புகளுக்கான சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏற்கப்படமாட்டாது.
முக்கிய விதிகள் வெளியீடு
அதேபோல தபால் அல்லது பிறவழி முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் (Guides, Notes) ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது எனவும் அறிவிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை பயன்படுத்தி தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: 1800 425 6753 (10:00 am – 05:45 pm)