தமிழ்நாடு முழுவதும் அரசுக் கல்லூரிகளில் பணியில் சேர நடத்தப்படும் உதவிப் பேராசிரியர் தேர்வு அடுத்த மாதம் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது.


மத்திய அரசு சார்பில் நெட் என்னும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல மாநில அரசு சார்பில் செட் எனப்படும் மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நெட் தேர்வை, என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையும் செட் தேர்வை மாநிலப் பல்கலைக்கழகங்களில் ஒன்றும் நடத்துவது வழக்கம்.


2024ஆம் ஆண்டு செட் தேர்வை, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துவதாக இருந்தது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடத்தவும் தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.


ஆண்டுதோறும் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டிய நிலையில், கடைசியாகத் தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெட் தேர்வு நடத்​தப்​பட்​டது. அதன்​பிறகு கடந்த 2 ஆண்டுகாலமாக டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்லை.


கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு


முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிக்கையில் 2024 ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


எதிர்பாராத விதமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல், தகுதித் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் தேர்வு இதுவரை நடத்தப்படவில்லை. 2024 முடிந்து 2025 தொடங்கிவிட்டது. புத்தாண்டின் 2ஆம் மாதமே தொடங்கிவிட்ட நிலையில், இன்னும் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.


இதனால் ஆசிரியர் பயிற்சியை முடித்த பட்டதாரிகளும் பட்டயதாரிகளும் வேதனையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் தேர்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதத்தில் தேர்வை நடத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெறலாம் என்று டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்தனர்.


1 லட்சம் பேர் விண்ணப்பிப்பு


ஏற்கெனவே கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு சுமார் 1 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/