உதவிப் பேராசிரியர் தேர்வு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளதாவது:

’’ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.04/2025, நாள் 16.10.2025 இன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு வரும் 27.12.2025 அன்று  நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வு காலை மற்றும் மாலை வேளைகளில் நடத்தப்பட உள்ளன.

Continues below advertisement

தேர்வு விவரம்

இதில் ஓஎம்ஆர் அடிப்படையிலான தேர்வு முதல் தாள் காலையில் நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு இரண்டாம் தாள், மதியம் நடக்க உள்ளது. உதவிப் பேராசிரியர் தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களில் நடைபெற உள்ளது.

(https://www.trb.tn.gov.in/) தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

தேர்வர்கள் தங்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம். 

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் இடர்ப்பாடு மற்றும் அதன் தொடர்பான ஐயங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள குறை தீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல தேர்வு மையங்கள் மாற்றம் சார்ந்த கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in