2023- 24ஆம்‌ ஆண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ மற்றும் பகுதிநேர டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஜூன் 9 வரை) கடைசித் தேதி  என்று தொழில்‌நுட்பக்‌ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.‌


தமிழ்நாட்டில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இந்த பல்வகை தொழில்நுட்பக்‌ (பாலிடெக்னிக்) கல்லூரியில் பட்டயப் படிப்பு மாணவர்கள்‌ சேர்க்கை குறித்து தொழில்‌நுட்பக்‌ கல்வி இயக்ககம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 


தமிழ்நாடு அரசு அனைத்து பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கவும்‌, இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?









இந்த மையங்களின்‌ பட்டியல்‌ https://www.tnpoly.in/ என்ற இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது.


கல்வித்‌ தகுதி என்ன?


* முதலாம் ஆண்டு பட்டயச்‌ சேர்க்கை (First Year Diploma Admission)


10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. (10th std passed)


* பகுதி நேர பட்டயச்‌ சேர்க்கை (Part time Diploma Admission) 


10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . அல்லது 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ 2 ஆண்டுகள்‌ தொழில்‌ பிரிவில்‌ பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. (10th std passed and 2 years ITI passed in any branch of Engineering and Technology). அல்லது 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ 2 ஆண்டுகள்‌ தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்‌.


பதிவுக் கட்டணம்‌ 


பதிவுக்‌ கட்டணமான ரூ.150/-ஐ விண்ணப்பதாரர்‌ Debit Card  / Credit Card / Net Banking ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின்மூலம் இணையதள வாயிலாகச் செலுத்த வேண்டும்‌. எனினும் எஸ்சி/ எஸ்டி பிரிவினர்‌ பதிவுக்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டிய அவசியமில்லை.


முதலாம் ஆண்டு, பகுதி நேர பட்டயப்‌ படிப்பில் சேர மாணவர்கள், மே 20 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.  இதற்கு விண்ணப்பமப் பதிவு செய்ய இறுதி நாள்‌ - ஜூன் 9, 2023 (இன்று) ஆகும்.


என்னென்ன ஆவணங்கள் தேவை?


* 12ஆம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / ஐடிஐ மதிப்பெண்‌ சான்றிதழ்‌,


* சாதிச்‌ சான்றிதழ்‌,


* சிறப்புப் பிரிவினர்‌ சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்‌


* விண்ணப்பதாரர்‌ புகைப்படம்‌ ஆகியவை தேவையான அளவுகளில்‌ இணையதளத்தில்‌ குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.


மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்கள்‌, வழிகாட்டி மற்றும்‌ தொலைபேசி எண்களை மாணவர்கள்‌ https://www.tnpoly.in/ என்ற இணையதள வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌.