தமிழக அரசின் கல்வி உதவி திட்டங்கள்

தமிழக அரசு கல்விக்காக பல்வேறு உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம், இலவச மிதி வண்டி, இலவச புத்தகம், புத்தக பை, கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி வருகிறது. மேலும் காலை உணவு சாப்பிட்டாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற காரணத்தால் பள்ளியிலேயே காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படு வருகிறது. இதனால் பல லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை

மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிக்கும் போது 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று உயரவேண்டும் என்பதற்காக சிறப்பு பயிற்சி வகுப்பையும் நடத்தி வருகிறது. அந்த வகையில், யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடர்பான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

ரூ.25,000 உதவித்தொகை- விண்ணப்பிக்க அழைப்பு

இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி /இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி சேர்ந்த மாணவர்கள், ஆன்லைன் மூலம் பெற்ற தமிழ்நாட்டைச் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Continues below advertisement