பிளஸ் 1, பிளஸ் 2 பொது துணைத் தேர்வை எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜூன் 23) வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மேல்நிலை இரண்டாம் ஆண்டு/ மேல்நிலை முதலாமாண்டு (ARREAR) துணைத் தேர்வு, ஜூன்/ ஜூலை 2026 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Continues below advertisement

கடந்த மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்வை எழுதாத மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.

நடைபெறவுள்ள ஜூன்/ ஜூலை 2026, மேல்நிலை இரண்டாமாண்டு / மேல்நிலை முதலாமாண்டு (ARREAR) துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தக்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 23.08.2026 (செவ்வாய்க் கிழமை) அன்று பிற்பகல் முதல் www.dge.tn.govin என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் HALL TICKET- என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் HSE SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2028 HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தினை Click செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரியத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்தபின் தாங்கள் எழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தேர்வு நாட்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

உதவி எண் வெளியீடு

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 9496383075/ 9488383078 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எனினும் துணைத் தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.