12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் 25ஆம் ஆண்டு முதல் ஜூலை 2ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு மாணவர்கள் மே 14தேதி முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:


நடைபெறவுள்ள ஜூன்‌ , ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு (+2) துணைத்‌ தேர்வுகளுக்கு மார்ச்‌ 2025 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்கள்‌ மற்றும்‌ விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்தும்‌ இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌
வரலவேற்கப்படுகிறது.


பள்ளி மாணவர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌


மாணவர்கள்‌, தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுத அவர்கள்‌ பயின்ற பள்ளிக்கு நேரில்‌ சென்று 14.05.2025 (புதன்கிழமை) முதல்‌ 29.05.2025 ( வியாழக்கிழமை ) வரையிலான நாட்களில்‌ (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 1100 மணி முதல்‌ மாலை 5.00 மணிக்குள்‌ விண்ணப்பிக்கவேண்டும்‌.


தனித்தேர்வர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌


ஜூன்‌ , ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியுள்ள தனித்தேர்வர்களும்‌ மற்றும்‌ மார்ச்‌ 2025 மேல்நிலை முதலாம்‌ ஆண்டு, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு  பொதுத்‌ தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும்‌ 14.05.2025 ( புதன்கிழமை) முதல்‌ 29.05.2025 (வியாழக்கிழமை) வரையிலான நாட்களில்‌ (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி
முதல்‌ மாலை 5.0௦ மணிக்குள்‌ கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை
மையங்கள்‌ வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்‌.


சிறப்பு அனுமதித்‌ திட்டம்‌



14.05.2025 ( புதன்கிழமை) முதல்‌ 29.05.2025 (வியாழக்கிழமை) வரையிலான நாட்களில்‌ ஜூன்‌, ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கத்‌ தவறும்‌ தேர்வர்கள்‌, சிறப்பு அனுமதித்‌ திட்டத்தில்‌ உரிய கட்டணத்‌ தொகையுடன்‌ 30.05.2025 (வெள்ளிக்கிழமை) மற்றும்‌ 31.05.2025 (சனிக்கிழமை) ஆகிய
நாட்களில்‌ ஆன்‌-லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


சிறப்பு அனுமதிக்‌ கட்டணம்‌ . ரூ.1000/- (2024 - 2025ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு மற்றும்‌ முழுமையாக அரசு உதவிப்பெறும்‌ பள்ளி களில்‌ பயின்று தேர்ச்சிப்பெறாத 7, வருகைப்புரியாத மாணவர்களுக்கு மட்டும்‌ இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது)



விண்ணப்பங்களை ஆன்‌லைனில்‌ பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள் மையம் (Government Examinations Service Centres) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின்‌
(Government Examinations Service Centres) விவரங்கள்‌ மற்றும்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்தல்‌ குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும்‌ அறிவுரைகள்‌ ஆகியவற்றை Directorate of Government Examinations என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌.