Tamil Nadu 12th Result 2025 Topper: தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், பழனியை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

+2 தேர்வு முடிவு - மாநில அளவில் முதலிடம்

வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஓவியாஞ்சலி எனும் அந்த மாணவி ஆங்கிலத்தை தவிர மற்ற அனைத்து பாடங்களில் முழுமையாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதவாது மொத்த மதிப்பெண்களான 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்து, ஓவியாஞ்சலி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இவர் பழநி பாரத் வித்யாபவன் (BVB) பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காமர்ஸ் பிரிவை எடுத்து பயின்ற ஓவியாஞ்சலி, தமிழ், எகனாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்ட்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு என சென்டம் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் மட்டும் 99 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.

டாப் 5 இடம் பிடித்த மாணவ, மாணவிகள்:

இதுபோக, திருப்பூரைச் சேர்ந்த அறிவியல் பாடப்பிரிவை எடுத்து படித்த எஸ். ருத்ரமூர்த்தி எனும் மாணவர் 598 மதிப்பெண்களை குவித்துள்ளார். தொடர்ந்து, சென்னையை சேர்ந்த அறிவியல் பாடப்பிரிவை எடுத்து படித்த ஆர். லட்சுமிகாந்த் என்பவர் 597 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.  ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஸ்மீன் என்பவரும் அறிவியல் பாடப்பிர்வில் படித்து 597 மதிப்பெண்களும், தர்மபுரியை சேர்ந்த வணிக பாடப்பரிவில் பயின்ற ரக்‌ஷனா என்பவர் மதிப்பெண்களையும் குவித்துள்ளனர்.