இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நடைபெற்று முடிந்த ஜூலை-2025, பத்தாம்‌ வகுப்பு துணைத்தேர்வு எழுதி, மறுகூட்டல்‌ (Re- total) மற்றும்‌ மறுமதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள்‌, மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களது பதிவெண்களின்‌ பட்டியல் வெளியாகி உள்ளது.

விடைத் தாள்களில் எந்த மாற்றமும் இல்லை

இந்தப் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ Notification பகுதியில்‌ SSLC Examination தலைப்பில்‌ இன்று - 26.08.2025 (செவ்வாய்க்‌ கிழமை) அன்று பிற்பகல்‌ வெளியிடப்பட்டு உள்ளது. இப்பட்டியலில்‌ இடம்‌ பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண்‌ மாற்றமும்‌ இல்லை எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.

பெறுவது எப்படி?

மறுகூட்டல்‌ / மறுமதிப்பீட் டில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்கள்‌ மட்டும்‌ 26.08.2025 பிற்பகல்‌ முதல்‌ மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள்‌ அடங்கிய தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழை (Provisional Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்‌ எனவும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

தேர்ச்சி விகிதம் எப்படி?

2024-2025 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8,71,239 மாணக்கர்கள் எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மே 16ஆம் தேதி வெளியிட்டார். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 8,17,261 ஆகும். அதாவது, 93.80% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். மீதமுள்ள 6.2% பேர் துணைத் தேர்வை எழுதினர்.

அவர்களுக்கான தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/