2025ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு மறுகூட்டல்‌ மறுமதிப்பீடு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நடைபெற்று முடிந்த மார்ச்‌/ ஏப்ரல்‌-2025, பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, மறு கூட்டல்‌ (Re-total) மற்றும்‌ மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள்‌, மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களது பதிவெண்களின்‌ பட்டியல்‌ https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ Notification பகுதியில் வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பாக இன்று 03.07.2025 (வியாழக்கிழமை) பிற்பகல்‌ 4 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு மதிப்பெண்களை அறிவது எப்படி?

தேர்வர்கள்  https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1751538220.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

இதில் விடைத் தாட்களில்‌ மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்பட்டியலில்‌ இடம்‌ பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாட்களில்‌ எவ்வித மதிப்பெண்‌ மாற்றமும்‌ இல்லை எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக மதிப்பெண்‌ பட்டியல்..

அதே நேரத்தில் மறு கூட்டல்‌ / மறு மதிப்பீட்டில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்கள்‌ மட்டும்‌, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்‌ தங்களது பதிவண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள்‌ அடங்கிய தற்காலிக மதிப்பெண்‌ பட்டியலை (Provisional of Marks) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ எனவும்‌ அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ் மொழிப் பாடத்துடன் தொடங்கிய தேர்வு, சமூக அறிவியல் தேர்வுடன் முடிவு பெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றன.

இவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்றன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/