மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அளித்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர். Tamil Nadu 10th Result 2026 மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 37,495 மாணாக்கர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 35 ஆயிரத்து 586 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். அதன்படி மதுரை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 94.91 சதவீதம் பெற்றனர். 92.75 சதவீதம் மாணவர்களை தேர்ச்சிபெற்ற நிலையில்  அதை விட கூடுதலாக மாணவிகளின் தேர்ச்சி  97.02 சதவிகிதமாக அதிகம் பெற்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள 479 பள்ளிகளில் 196 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருந்தனர். 214 அரசு பள்ளிகளில் 68 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியடைந்துள்ளது.  பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

Continues below advertisement

214 அரசு பள்ளிகளில் பயின்று தேர்வெழுதிய 13139 மாணாக்கர்களில், 12,163 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் வாரியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கி  வாழ்த்து தெரிவித்தார். மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மாணவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு பொதுத்தேர்விலும் சிறப்பாக கவனம் செலுத்தி தேர்வெழுதி உங்களுடைய எதிர்காலம் கருதி உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் படித்து முன்னேற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாணாக்கர்கள்  தங்களது எதிர்காலம் கல்வி திட்டம் குறித்து எடுத்துரைத்த போது ஏராளமான மாணாக்கர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அதிகாரிகள் அமரும் இருக்கைகளில் தனது அருகில் மாணாக்கர்களை அமர வைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

Continues below advertisement

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திட அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களின் பங்களிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார். மேலும், இதேபோன்ற சிறப்பான தேர்ச்சி விகிதத்தை தொடர்ந்து நிலைநிறுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.