திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மிகவும்  பிற்படுத்தப்பட்டோரின் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 9 மற்றும் 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உடனடியாக உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-


திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிப்படிப்பு (Prematric) கல்வி உதவித்தொகை திட்டம் 2022-2023-ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 9 மற்றும் 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த 16 ஆயிரத்து 191 மாணவியர்களின் ஆதார் விவரங்களை EMIS Portal –ல் விவரம் பெறப்பட்டு அவர்களின் வங்கிக்கணக்கில் ஆண்டிற்கு ரூபாய் 4000 வீதம் இரு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேற்படி 2022-2023-ஆம் ஆண்டிற்கு வங்கிக்கணக்கு e-Kyc Failed cases காரணத்தால் 361 மாணவியர்களும் NPCI Failed cases காரணத்தால் 639 மாணவிகளும் 2023-2024-ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த 9 மற்றும் 10-ஆம் வகுப்பைச்சேர்ந்த 15 ஆயிரத்து 975 மாணவியர்களில் e-Kyc Failed cases காரணத்தால் 481 மாணவியர்கள் NPCI Failed cases காரணத்தால் 2366 மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.


வங்கிக்கணக்கினை Active செய்து கல்வி உதவித்தொகை பெறுங்கள் 


மாணவியர்களின் விவரம் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவியர்களின் பெற்றோர்கள் ekyc unverified மாணவியர்களின் விவரங்களை இல்லம் தேடிக்கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் உதவியுடன் Face Authentication மூலம் அம்மாணவியர்களின் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களின் அடிப்படையில் TNeGA –ன் தரவுகளில் update செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கணக்கு NPCI Failed cases (வங்கிக்கணக்கு செயல்பாட்டில் இல்லாதது மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதது) போன்ற காரணங்களால் நிலுவையுள்ள மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களின் மூலம் தங்களது வங்கிக்கிளையை அணுகி வங்கிக்கணக்கினை Active செய்து கல்வி உதவித்தொகை பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.