திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கௌரவப்படுத்திய அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவி. பள்ளியை தத்தெடுத்து பல்வேறு நல திட்டங்களையும் செய்வேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த டி.வீரபள்ளி பகுதியைச் சேர்ந்த  எம்ஐஎஸ்.குரூப் இந்தியா நிறுவன தலைவர் டாக்டர்.திருப்பதி ராவ் என்பவர் ஆயில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா என்பவர் சிறுவயதில் டி.வீரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வந்தார். 

 

Continues below advertisement

அதன் காரணமாக அர்ச்சனாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் படித்த தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து ரோஜா பூ கொடுத்தும் அதேபோல தலையில் கிரீடம் அணிவித்து கௌரவப்படுத்தி அழைத்து வந்தனர். 

அதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ரூபாய் 5000 மதிப்பிலான ஸ்கூல் பேக், நோட்டு புத்தகம், வாட்டர் பாட்டில், ஸ்னாக்ஸ் பாக்ஸ், டிபன் பாக்ஸ், உள்ளிட்ட பல பொருட்களை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். அதுமட்டுமின்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அதேபோல பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளையும் நேரில் அழைத்து கௌரவப்படுத்தினார்.

Also Read: கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் எப்படி? - வேல்முருகனின் நியாயமான கேள்விகள் - தவெக அரசின் பதில் என்ன?

அப்போது பேசிய அவர், பள்ளிக்குள் விழா நடத்த பல்வேறு கட்டுப்பாட்டுகள் இருந்ததால் நேரில் அழைத்து பள்ளி மாணவ, மாணவிகளை கௌரவ படுத்தினேன். மேலும் பள்ளியை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதற்கு ஒப்புதல் கிடைத்தால் இன்னும் சுலபமாக என்னால் முடிந்த அனைத்து நல திட்டங்களையும் செய்து தருவேன் எனவும் உறுதியளித்தார்.